இது தான் தென்னைக்கு உரம் இட ஏற்ற பருவம்..!!
விவசாய கேள்வி - பதில்கள்...!
தென்னைக்கு எப்பொழுது உரம் இட வேண்டும்?
தென்னைக்கு மண்ணில் ஈரப்பதம் போதுமானதாக உள்ள நிலையில் உரம் இட வேண்டும்.
மேலும் நீர்பாசன வசதி கொண்ட நிலங்களில் உரத்தை மூன்று அல்லது நான்கு முறை (ஏப்ரல் - மே, ஆகஸ்ட்- செப்டம்பர், டிசம்பர் மற்றும் பிப்ரவரி - மார்ச்) இடலாம்.
அருகம்புல்லை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?
அருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும். இதனைக் கட்டுப்படுத்த அருகம்புல்லை 3 வருடங்கள் வரை நிலத்திலேயே விட்டு விட வேண்டும்.
பிறகு பசுந்தாள் உரச்செடிகளான சணப்பு, கொழுஞ்சியை சாகுபடி செய்து, பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதால் களைகள் குறையும்.
கொத்தமல்லியை எந்த மாதத்தில் சாகுபடி செய்யலாம்?
கரிசல் மண் நிலங்களில் பாசன பயிராக கொத்தமல்லி சாகுபடி செய்யலாம். மாசி, பங்குனியில் கோடைக்கால கொத்தமல்லி சாகுபடி செய்யலாம்.
ஜுன்- ஜூலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர் ஆகிய இரண்டு பருவத்தில் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக செப்டம்பர் - அக்டோபர் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.
பருத்தி பயிரில் களைகளை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?
பருத்தி பயிரின் இடையில் சணப்பு விதைத்து, சிறிது உயரம் வளர்ந்த பின் அதனை அறுவடை செய்து செடியை சுற்றி மூடாக்கு செய்வதால் களைகளை கட்டுப்படுவதுடன், மண்புழுக்களை அதிகரிக்கச் செய்து மகசூலை அதிகரிக்கிறது.
கால்நடைகள் வளர்ப்போர் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்?
கொட்டகையை சுற்றிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செடி-கொடிகள், புதர்களை அகற்ற வேண்டும்.
மழைச்சாரல் கொட்டகைக்குள் வராத வண்ணம் தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
அடர் தீவனங்களை உலர்வான இடத்தில் சேகரித்து வைக்க வேண்டும். உலர் தீவனங்களையும் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
#FaizalPetsFarm
#SaveDelta
#SaveTrees
#PlantTrees
#SaveAgriLand
#SaveAgriculture
#SaveFarmers
#SavePalmTrees
#SaveOurNativeBreeds
#SaveRainWater
#SaveNature
#SaveAnimalsAndBirds
#SaveHumans
#BoycottPlasticBags
இது தான் தென்னைக்கு உரம் இட ஏற்ற பருவம்
-
- Posts: 487
- Joined: Mon Jun 04, 2018 10:42 pm