மீன் அமினோ அமிலம்

Post Reply
Tamilorganic
Posts: 461
Joined: Mon Jun 04, 2018 10:42 pm

மீன் அமினோ அமிலம்

Post by Tamilorganic » Sat Aug 11, 2018 3:47 pm

மீன் அமினோ அமிலம்
பயிர் வளர்வதற்கும்; பூக்கும் திறனை அதிகப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வளர்ச்சி ஊக்கிதான் மீன் அமினோ அமிலம். இவற்றை நாமே குறைந்த செலவில் தயாரிக்கலாம். தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் செலவு குறையும் பலன் கூடுதலாக கிடைக்கும். அகையால் குறைந்த செலவை கொண்டு மீன் அமினோ அமிலம் தயாரித்து தரமான பொருட்களை உற்பத்தி செய்து கூடுதல் மகசூல் பெற முயலுவோம்.
மீன் அமினோ அமிலத்தின் பயன்கள்
75 சதவீதம் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், 25
சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது
பயிர்களுக்கு 90 சதவீதம் தழைச்சத்து தரக்கூடியது.
பயிர்களுக்கு பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும்
தரமான காய்கறிகளை தருகிறது
பயிர்கள் ஓரே சீராக வளர்கிறது
நுண்ணூயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
பயிர்கள் நன்கு செழித்து வளரும்.
சில நேரங்களில் எலி போன்ற விலங்குகளின் தாக்குதலை குறைக்கிறது.
மீன் அமினோ அமிலம் தயாரிக்க
தேவைப்படும் பொருட்கள்
மீன் - 1 பங்கு
நாட்டுவெல்லம் - 1 .¼ பங்கு
பிளாஸ்டிக் வாளி - ஒன்று
தயாரிக்கும் முறை
முதல் படி
பெரிய மீனாக இருந்தால் சிறு.சிறு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் வாளியில்; மீனையும், நாட்டுவெல்லத்தையும் 1.¼ என்ற விகிததில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கலக்கிவிட்டு முடியை இறுகி மூடி வைக்க வேண்டும்.
இரண்டாம்படி
22 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் நொதித்து தேன்போல் மாறிவிடும். இதில் 300 மில்லி கரைசல் கிடைக்கும். இவற்றை வடிகட்டி எடுத்துக் பயிருக்கு தெளிக்கலாம.; கரைசலில் கழிவுகள் ( மீனின் முள்,) மீன் கழிவுகள் ஏதாவது கரையாமல் இருந்தால் அரைக்கிலோ வெல்லம், அரைக் கிலோ மீன் திரும்பவும் சரியான விகிதத்தில் போட்டு கிளறி விட்டு மூடி விடவும், இவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் பயிர்கள்
காய்கறி;கள், கொடிவகைகள், பணப்பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்துபயிர்கள், மரப்பயிர்கள், மலர்சாகுபடி, தானியப்பயிர், போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கலாம். தெளிக்கும் பருவம் : பயிர் பூ மற்றும் காய்ப்பு பருவத்தில் தெளிக்கலாம். அல்லது தண்ணீர் பாயும் பொழுது தண்ணீருடன் கலந்து விடலாம்.
குறிப்பு :
இதனை பயிர்களுக்கு அதிகமாக பயன்படுத்தாமல் பரிந்துரை செய்த அளவு பயன்படுத்த வேண்டும்.
இதனை மற்ற இயற்கை இடுபொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்
இதனை தயாரிக்கும் பொழுது தயாரிக்க பயன்படும் கலனை மண்ணில் 75 சதம் புதைத்து வைத்து தயாரித்தல் தரம் நன்றாக இருக்கும்.
தேவைப்படுவோர் தொடர்புகொள்ள
8870392422
Attachments
38207491_1566171470176764_1869320868463640576_n.jpg
38207491_1566171470176764_1869320868463640576_n.jpg (11.27 KiB) Viewed 561 times
38148161_1566171566843421_2764088815374041088_n.jpg
38148161_1566171566843421_2764088815374041088_n.jpg (43.7 KiB) Viewed 561 times
38292926_1566171920176719_8435775206290620416_n.jpg
38292926_1566171920176719_8435775206290620416_n.jpg (92.64 KiB) Viewed 561 times

Post Reply