தேனில் ஊறவைத்த நெல்லிக்கனி

Post Reply
Tamilorganic
Posts: 487
Joined: Mon Jun 04, 2018 10:42 pm

தேனில் ஊறவைத்த நெல்லிக்கனி

Post by Tamilorganic » Thu Jan 03, 2019 4:09 pm

தேனில் ஊறவைத்த நெல்லிக்கனி
தற்போது, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்த ‘தேன்’ நெல்லி, எங்களிடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
இதை தினமும் சாப்பிடுவதால் கிட்டும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இதனால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
கண் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவதிப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிட்டும்.
அடிக்கடி ஜலதோஷம், தொண்டைப்புண்ணால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டுவர வேண்டும். அதன்மூலம், உடலில் சேர்ந்த சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.
தேனில் நெல்லிக்காயை ஊற வைத்துச் சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும், அப்பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகி விடும்.
அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
முடி கொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் ‘தேன்’ நெல்லிக் காயைச் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள மருத்துவக் குணங்களால் முடி கொட்டுதல் தடுக்கப்படும். ரோமக்கால்கள் வலு வடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.
ஆக, பலவித உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு ஒரு ‘சுவையான’ தீர்வு, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்!
எங்களிடம் இரண்டு வகையான தேன் நெல்லி கிடைக்கும்...
தொடர்புக்கு:
மதுரம் இயற்கை தேன் பண்ணை,
காளப்பட்டி மெயின் ரோடு,
நேருநகர்,
கோயம்புத்தூர்.
Cell and watsup
9566610023
8531818127
Land line
0422-4958855
Attachments
49822916_330503527797408_2997196666420854784_n.jpg
49822916_330503527797408_2997196666420854784_n.jpg (57.79 KiB) Viewed 33091 times

Post Reply