கீரை

Post Reply
Tamilorganic
Posts: 487
Joined: Mon Jun 04, 2018 10:42 pm

கீரை

Post by Tamilorganic » Thu Jul 30, 2020 3:42 pm

அன்று நூறு வயதை தாண்டியும் ஊள்றுகோல், கண் கண்ணாடி, காது கருவி, தலைக்கு கருப்புசாயம், தேடாத முன்னோர்கள் பலர். இன்றைய சர்க்கரை, பல் சொத்தை, ஆண்மை குறைவில்லாத நிலை, மூட்டுவலி இன்னும் விதவிதமான வியாதிகள் இல்லாமல் உடலை வளர்த்தார்களே அவர்கள். எப்படி???
காரணம், நம்மை சுற்றியே அன்றும் இன்றும் என்றும் ஆரோக்கியம் தந்த அற்புதமாக தானாக வளரும் கீரைகளே. நாம் தான் அதை இன்று உள்ள சோம்பேறித்தனத்தால் தேடுவதில்லை.
பொதுவாக கீரைகள் என்று தனியாக பூமியில் முளைப்பதில்லை. நம்மைச்சுற்றியுள்ள தமிழ் நிலத்திலுள்ள மூலிகைகள் பலவற்றையும் கீரைகளாக காலங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர் நமது முன்னோர்கள். நஞ்சுத்தன்மை இல்லாத சுவைதரக்கூடிய அனைத்துமே கீரைகள்தான்.

மேலும் அவற்றில் சுவை, மணம் சேர்ப்பதும், பருவநிலைக்கு தகுந்தாற்போல அவற்றை உபயோகிப்பதும் நமது திறமையே.
கீரைகளில் சில...
1. பொன்னாங்கண்ணி கீரை
2. ஆரைக் கீரை
3. குறிஞ்சாக் கீரை
4. தாளி கீரை என்ற நறுந்தாளி கீரை
5. முசுட்டை கீரை
6. குமுட்டி கீரை
7. மின்னக்கீரை என்ற முன்னை கீரை
8. முருங்கை கீரை
9. புண்ணாக்கு கீரை என்ற புண்ணாத்தி கீரை
10. மூக்கிரட்டை கீரை
11. குப்பை கீரை
12. கோவ கீரை என்ற கொவ்வை கீரை
13.பருப்பு கீரை
13.மணலி கீரை
14.பொடுதலை கீரை
15. அப்பக்கோவை கீரை
16. வல்லாரை கீரை
17. தண்டு கீரை சிறுபருவத்தில் முளைக்கீரை
18. கரிசலாங்கண்ணி கீரை
19. லஜ்ஜைகெட்ட கீரை என்ற சண்டி கீரை
20. மகிலி கீரை
21. தொய்யக்கீரை என்ற துயிலி கீரை
22. பசலைக்கீரை
23. தூதுளம்கீரை
24. துத்திக்கீரை
25. நாயுருவிக்கீரை
26. முடக்கத்தான் கீரை
27. பிரண்டை கீரை
28. கானாவாழை கீரை
29. அகத்தி கீரை
30. அம்மான்பச்சரிசி கீரை
31. கிணற்றுபச்சை கீரை
32. காட்டுக்கடுகு கீரை
33. புளிச்சக்கீரை
34. காசினி கீரை
35. தவசிமுருங்கை கீரை
36. வெந்தயக்கீரை
37. சாணக்கீரை
38. சூரி கீரை என்ற நத்தைசூரி கீரை
39. வேளைக்கீரை என்ற நல்லவேளை கீரை
40. முள்முருங்கை கீரை
41. சக்ரவர்த்தி கீரை
42. பரட்டை கீரை
43. பொடுதலை கீரை
44. மணித்தக்காளி கீரை
45. பால்பெருக்கி கீரை
46. வேலிப்பருத்தி கீரை
47. கொத்துமல்லி கீரை
48. கருவேப்பிலை கீரை
49. புளியங்கீரை
50. காட்டுத்தக்காளிகீரை

இவற்றில் கிடைக்கும் கீரைகளை அனைத்தையும் கலந்து போட்டு சமையல் செய்தால் அது கலவைக்கீரை. இன்னும் எத்தனையோ.. இவையெல்லாம் தானாக வேலி, வயல், காடு, மரம் போன்ற இடங்களில் வளர்ந்து வீனாகப்போகிறது. இந்த கீரைகளை யாரும் ரசாயன உரம் போட்டு வளர்பதில்லை, மண்ணில் உள்ள இயற்கை சத்துக்களின் மூலம் தானாகவே வளர்கிறது இக்கீரைகளை கூட்டு, பொரியல், துவட்டல், கடைசல், துவையல், சட்னி ரசம், சூப் ,சாம்பார்,குருமா, என ஒவ்வோறு கீரையையும் அதன் குணத்தை பொருத்து சமைத்து சாப்பிட நல்ல சுவையாகவும், உடலுக்கு உரம் ஏற்றும் உணவாகவும் இருக்கும் நண்பர்களே.எல்லா இடத்திலும் வளரக்கூடிய நம் நாட்டில் வாழும் நம் உணவுகளே, இதையே நம் முன்னோர்கள் தினம் ஒரு கீரையாக சாப்பிட்டு நோய்கள் இன்றி வாழ்ந்தார்கள், நாமும் பார்த்த இடத்தில் பறித்து சமைத்து சாப்பிடலாமே நண்பர்களே.🙏🏻🙏🏻🙏🏻👏👏👏
Attachments
116153859_1181110508890572_8522744180014582138_o.jpg
116153859_1181110508890572_8522744180014582138_o.jpg (49.58 KiB) Viewed 704 times

Post Reply