இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும்நன்மைகள்! ! ! !

Post Reply
Tamilorganic
Posts: 461
Joined: Mon Jun 04, 2018 10:42 pm

இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும்நன்மைகள்! ! ! !

Post by Tamilorganic » Fri Oct 19, 2018 12:16 pm

இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும்நன்மைகள்! ! ! !
1. உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
2. இருதயம், கல்லீரல், சிறுநீரகம்,கண்கள் மற்றும்இரத்த நாளங்களில்உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.
3. மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம்,குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
4. பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.
5. நீர்க்கடுப்பு: ஏப்ரல், மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.
6. சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்புஉண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர, 5 நாளில் அவை நீங்கும்..
7. உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.
8. பேதி, சீதபேதி, இரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டுஉடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
9. டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
10. வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.
11. காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.
12. பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.
13. காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள். மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.
Attachments
44398808_785583391773427_7367277876661452800_n.jpg
44398808_785583391773427_7367277876661452800_n.jpg (19.93 KiB) Viewed 683 times

Post Reply