Kichalli samba -கிச்சலி சம்பா

Post Reply
Tamilorganic
Posts: 461
Joined: Mon Jun 04, 2018 10:42 pm

Kichalli samba -கிச்சலி சம்பா

Post by Tamilorganic » Thu Jan 03, 2019 2:34 pm

கிச்சலி சம்பா 84 வது நாள் நாற்றாங்காலில் விதை தெளித்த நாளில் இருந்து இன்னும் 30 லிந்து 35 நாளுக்குள் அறுவடைக்கு தயாராகும்... விளைச்சல் கொஞ்சம் குறைவாக இருக்கும் கடந்த ஆண்டை விட..
1. வயல் சரிசமமாக இல்லை...
2. களை மேம்பாடும் மற்றும் இடுபொருள் கொடுப்பது சரியான நேரத்தில் செய்ய முடியவில்லை.
3. எந்த வித நோய் தாக்கலும் இது வரை காணப்படவில்லை.
4. 1/2 ஏக்கரில் பல தானியம் அல்லது தகக்கை பூண்டு அல்லது பசுந்தாள் உரம் விதைக்கபட வில்லை அந்த வயல் மட்டும் சரியாக தூர் கட்டாமல் பயிர் வளர்ச்சி மந்தமாக உள்ளது....
இந்த தவறுகள் இல்லாமல் இருக்கவேண்டும் என்று கடந்த ஆண்டே முடுவு எடுத்தேன்....ஆனாலும் முடியவில்லை
கண்டிப்பாக இயற்கையில் நெல் பயிர் செய்பவர்கள் இந்த தவறுகள் வராமல் பார்த்து கொள்ளுங்கள் தோழர்களே....
கடலைபுன்னாக்கு வயலுக்கு கொடுத்த பிறகு இது மற்ற புன்னாக்கை காட்டிலும் சிறந்தது என்றும் மற்றும் கால்நடை தொழுவுரம் இல்லாதபோது இது மாற்றாக கொடுத்தால் பயிருக்கு சிறந்த து என்று நடைமுறையான நல்ல மாற்றம் நெல் பயிரில் நன்றாக தெரிந்தது....
இந்த முறை அனைவருக்கும் தெரிந்ததே...இது ஒன்றும் புதிது அல்ல இருந்தாலும் இதை அழுத்தமாக கோடிட்டு காட்ட விரும்புகிறேன்....
சுரேஷ்குமார்
இயற்கை விவசாயம்
விருத்தாசலம்
9449617689
Attachments
49329758_623643768055810_696738764512296960_n.jpg
49329758_623643768055810_696738764512296960_n.jpg (104.11 KiB) Viewed 262 times

Post Reply